Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் குடியரசு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உத்தரமேரூர் ஜன-26

உத்தரமேரூர் ஒன்றியத்தில் சனிக்கிழமையன்று குடியரசு தினவிழா சிறப்பாக நடந்தது.

                                                   சோழா அரிமா சங்கம்

உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் சார்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற
குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை மாவட்ட தலைவர் டாக்டர் சி.சுப்பிரமணியன்
ஏற்றினார்.  செயலாளர் கே.வி.சேகர் இனிப்புகள் வழங்கினார்.  பொருளாளர் டாக்டர்
ஆனந்த் வரவேற்று நன்றி கூறினார்.
                                                   
                                           ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்
தலைமை தாங்கி குடியரசு தின தேசிய கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்
(கி.ஊ) உஷாராணி வரவேற்றார்.  துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரியமாலா வ.ஊ இனிப்புகள் வழங்கினார்.  மேலாளர்
நா.மாரிச்சாமி நன்றி கூறினார்.
                                         
                                                 பேரூராட்சி அலுவலகம்

உத்தரமேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் க.சுமதிகுணசேகர்
கொடியேற்றினார்.
                                                வட்டாட்சியர் அலுவலகம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கே.தேவராஜன் தேசிய கொடியேற்றினார்.
                       
                                                    வட்டார வளமையம்
சர்வ சிக்ச அபியான் வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் இராஜேந்திரன்
கொடியேற்றினார்.

                                    காட்டுப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி

 உத்தரமேரூர் தாலுக்கா காட்டுப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 64-வது
குடியரசு தினவிழா நடந்தது.  பள்ளித்தலைமை ஆசிரியர் ஏ.எம்.கோவிந்தராஜ்
வரவேற்றார்.  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.வரதன் தலைமை தாங்கி தேசிய
கொடியேற்றினார்.  பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் எஸ்.குணாகரன் இனிப்புகள்
வழங்கினார். பி.டி.ஏ துணைத்தலைவர் வழக்கறிஞர் என்.ஆறுமுகம், மேனலூர் ஊராட்சி
மன்ற துணைத்தலைவர் கற்பகம்வேலு ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கினார்கள். உதவி தலைமை ஆசிரியர் பா.பாப்பம்மாள் நன்றி கூறினார்.
by
  Suresh.S
  Uthiramerur.

No comments