Disqus Shortname

1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த உத்தரமேரூர் ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது,


  ச.சுரேஷ்  


 உத்தரமேரூர்


காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்திப்பெற்ற ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமையன்று காலை 9மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெகுவிமர்சையாக நடைபெற்றது,  காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் ஸ்ரீகாமாட்சியம்மாள் சமேத ஸ்ரீகைலாசநாதஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளதுஇக்கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழம்பெரும் கோவிலாகும். கி.பி.750 ம் ஆண்டில் நந்திவர்ம பல்லவன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் உள்ளனஈசான்ய மூலையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதுஈசான்ய மூலையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோல இந்த ஊர் காமிகம் என்னும் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளதுவீதிகள் அமைத்தல், நீர்நிலைகள் அமைத்தல், திருகோயில்கள் அமைத்தல் போன்றவை இந்த ஆகம விதிகளின்படியே அமைக்கப்பட்டுள்ளனஇது பண்டைய கால மன்னர்களின் ஆகமங்கள் மீதான ஆர்வத்தையும், தெய்வ பக்தியையும் காட்டுவதாக அமைந்துள்ளதுபல்லவர்கள் காலகட்டிட அமைப்பை கொண்டுள்ள இக்கோவில் அதிஷ்டானம் வரை கருங்கற்களாலும், அதன்மேல் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும்இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது,அதன்படி  காமாட்சியம்மாள் சமேத ஸ்ரீகைலாசநாதஸ்வாமி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது,இதையொட்டி 16-ந்தேதி முதல் 18-ம் தேதி வரை கோபூஜை, கணபதி, விக்னேஸ்வர, நவக்கிரக பூஜைகள், லட்சுமிஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்துசாந்தி, யாகசாலை, யாத்ராதான சங்கல்பம், கலசபுறப்பாடு, வேதபாராயணம், திருமுறைபாராயணம் உள்ளிட்டவை நடைபெற்றது,  கும்பாபிஷேகம் முடிந்தபிறகு  கைலாசநாதருக்கும், காமாட்சியம்பாளுக்கும் மஹா அபிஷேகம் செய்யப்படும்மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது,

 

No comments