Disqus Shortname

நெய்யாடுபாக்கத்தில் 127 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜன-30 
உத்தரமேரூர் தாலுக்கா நெய்யாடுபாக்கம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 127 பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களையும், ரூ.2 லட்சத்தில் பள்ளி மாணவ மாணவியர் அமர்ந்து எழுதுவதற்கு டேபிள் சேர்களையும், மேலும் குண்ணவாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட 20 முதியோர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுபாப்பு திட்டத்தின் அடிப்படையில் முதியோர் உதவித்தொகையும் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளித்தலைமை ஆசிரியர் வாசுதேவன் வரவேற்றார்.  ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.  மேலும், தீண்டாமை விழிப்புணர்வு நாள் கடைபிடித்து அனைவரும் உறுதிமொழியேற்றனர்.

No comments