Disqus Shortname

ஆதவப்பாக்கத்தில் 200 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, பேன், கிரைண்டர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்

உத்தரமேரூர் டிச - 31
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் ஆதவப்பாக்கம் ஊராட்சியில் அண்மையில்
நடைபெற்ற விழாவில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் பி.விமலாபிரகாசம் தலைமை தாங்கினார்.  வட்டாட்சியர்
கெ.தேவராஜன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.
உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்
கலந்துகொண்டு 200 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, பேன், கிரைண்டர்களை
வழங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு,
வி.ஆர்.அண்ணாமலை, வெங்கச்சேரி ஆறுமுகப்பிள்ளை, ஆதவப்பாக்கம் கோதண்டன்,
குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தண்டரை தணிகைவேல் உட்பட பலர்
பங்கேற்றனர்.  பாசறை ஒன்றிய செயலாளர் அ.ராமன் நன்றி கூறினார்

No comments