Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியம் கன்னிகுளம், புத்தளியில் 570 பயனாளிகளுக்கு வேட்டி சேலை எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்

உத்தரமேரூர் ஜன -6
        உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் கன்னிகுளம் கிராமத்தில் 260
பயனாளிகளுக்கும், புத்தளி கிராமத்தில் 310 பயனாளிகளுக்கும் இலவச வேட்டி
சேலை வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடந்தது.  கன்னிகுளம் ஊராட்சி மன்ற
தலைவர் வி.ராஜ்குமார் தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் வாசு,
ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக
அலுவலர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு 260 பயனாளிகளுக்கு வேட்டி
சேலை வழங்கி பாராட்டி பேசினார்.  சேர்மென் அர்.கமலக்கண்ணன் துணை சேர்மென்
அ.ரவிசங்கர், தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தண்டரை தணிகைவேல், சாலவாக்கம் ஒன்றிய குழு
உறுப்பினர் வனிதா முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  இளைஞரணி
இணைச்செயலாளர் பி.ஜி.ரஞ்சித் நன்றி கூறினார்.

புத்தளி
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம், புத்தளி கிராமத்தில் 310 பயனாளிகளுக்கு
வேட்டி சேலை வழங்கும் விழா நடந்தது.  புத்தளி ஊராட்சி மன்றத்தலைவர்
எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார்.  கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன்
வரவேற்றார். ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர்
அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.  உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு 310 பயனாளிகளுக்கு வேட்டி
சேலை வழங்கி சிறப்புரையாற்றினார். தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன்,
குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தண்டரை தணிகைவேல், சாலவாக்கம் ஒன்றிய
குழு உறுப்பினர் வனிதா முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இளைஞரணி
இணைச்செயலாளர் பி.ஜி.ரஞ்சித் நன்றி கூறினார்.

No comments