Disqus Shortname

'டெங்கு' காய்ச்சலை தடுக்க கால்வாய் சுத்தப்படுத்தும் பணி

  உத்திரமேரூர்அக்.20 :: உத்திரமேரூரில், 'டெங்கு' காய்ச்சல் பரவாமல் தடுத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரூராட்சி பகுதி முழுவதும், கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்திரமேரூரில், நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், அப்பகுதி கழிவுநீர் கால்வாய்களும் பழுதடைந்து, ஆங்காங்கே மழைநீர் கலந்த கழிவுநீர் தேங்குவதால், பகுதிவாசிகள் கொசு தொல்லையால் அவதிப் படுகின்றனர்.இதனால், பகுதிவாசிகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், பேரூராட்சிகள் துறை இயக்குனர், உத்திரமேரூர் பேரூராட்சி பகுதி முழுவதும், கடந்த, 9ம் தேதி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள, பேரூராட்சி
நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும், அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் துார்வாரும் பணி, தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments