Disqus Shortname

கோழியாலம் ஊராட்சியில் காலி குடங்களுடன் மக்கள் திடீர் சாலை மறியல்

உத்திரமேரூர்அக்.23, : உத்திரமேரூர் அடுத்த கோழியாலம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக முறையாக தண்ணீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.உத்திரமேரூர் அடுத்த கோழியாலம் ஊராட்சியில் 1500க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேல்நிலை தொட்டி மூலம், தெருக்குழாய்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை 2 மணிநேரம் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களாக தண்ணீர் சரி

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதப்பூஜை கொண்டாடுவதற்காக மக்கள், தங்களது வீடுகளை சுத்தம் செய்து வாகனங்களை கழுவி பூஜை செய்ய இருந்தனர். ஆனால், அதற்கான தண்ணீர் இல்லை. இதை பற்றி ஊராட்சி நிர்வாகத்துக்கு  தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தனர்.இதனால், ஆத்திரமடைந்த மக்கள், காலி குடங்களுடன் மதுராந்தகம் - கோழியாலம் சாலையில் நேற்று முன்தினம் காலை திரண்டனர். அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் கொண்டும் செல்லும் மோட்டார் பழுதானதால், தண்ணீர் வினியோகத்தில் தடை ஏற்பட்டது. விரைவில் அதை சரி செய்வோம் என உறுதியளித்தனர். இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்
வர வினியோகம் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.

No comments