Disqus Shortname

உத்திரமேரூரில் கஞ்சி காய்ச்சி குடித்து காத்திருப்பு போராட்டம் பட்டா வழங்க கோரிக்கை

உத்திரமேரூர்,15 அக்டோபர், 2015 : உத்திரமேரூர் பகுதியில் இருளர்கள் மற்றும் பழங்குடி இன மக்கள், பட்டா வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பொங்கி தின்னும் போராட்டம் நடத்தினர். உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரசாணிமங்கலம் மற்றும் நாஞ்சிபுரம் கிராமங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30ஆண்டுகளாக பலமுறை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும், அரசுத்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை காட்டி பட்டா வழங்க மறுப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 1993 ல்  இவர்களுக்கு அசேபா என்ற தொண்டு நிறுவனம் குடியிருப்பதற்காக வீடுகள் கட்டி கொடுத்தது. அவை தற்போது சிதலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தற்போது குடியிருக்கும் இடத்திற்கு பட்டா இல்லாததால், அரசு வழங்கக்கூடிய இலவச வீடுகளை கூட, பெறமுடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதையடுத்து, அரசாணிமங்கலம் மற்றும் நாஞ்சிபுரம் கிராம இருளர் மற்றும் பழங்குடியின மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து, உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று அடுப்பு மூட்டி பொங்கி தின்னும் போராட்டம்  நடத்தினர்.
இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டதால்,  போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மதுராந்தகம்: செய்யூரில் வழங்கப்பட்டு வந்த முதியோர் மாத உதவி தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கக்கோரியும், வட்டாட்சியர் அலுவலகம் அருகே கஞ்சி காய்ச்சி குடித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments