Disqus Shortname

மானாம்பதியில் தமிழக அரசின் விரிவான மருததுவ காப்பீட்டு திட்ட முகாம்

காஞ்சிபுரம் அக்,18
காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கிராமத்தில் தமிழக அரசின் விரிவான மருததுவ காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மானாம்பதி சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி தலைமை தாங்கினார். மருத்துவர் மைதிலி முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் ஆகியோர் முகாமில் துவக்க வைத்தனர்.  முகாமில்  மானாம்பதி, விசூர், வடகாலனி, தண்டரை, ஆரோக்கியபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1097 பேர் சிகிச்சை பெற்றனர். இம்முாகமில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம், பொது மருததுவம் உட்பட பல்வேறு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.  மேலும் இம்முகாமில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் விரிவான மருததுவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்64 பேர் மேல்சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு உரிய மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.  மேலும்  நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் இருக்க நிலவேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மருந்தாளுநர் சங்க மாநில பொருளாளர் சண்முகம் மாவட்ட செயலாளர் பாம்பன் பழனி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் இக்கூட்டத்தில் மருந்தாளுநர் சங்கத்தினர் கூறுகையில் மானாம்பதி சுற்றியுள்ள கிராமங்கள் தோரும் தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சார்பில் நோய் தடுக்கும் நிலவேம்பு குடிநீரினை தொடர்ந்து வழங்குவோம் என்று தெரிவித்தனர்.

No comments