Disqus Shortname

காக்கநல்லூர் சாலை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர் அக், 30
 உத்திரமேரூரில் இருந்து காக்கநல்லூர் வழியாக திணையாம்பூண்டி வரை செல்லும் தார் சாலை சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த சாலை வழியாக காக்கநல்லூர், முருக்கேரி, நெமிலிப்பட்டு, வெங்காரம், ஆண்டிந்தாங்கல்,சிலாம்பாக்கம் திணையாம்பூண்டி ஆகிய கிராமங்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் சுமார் 8000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை சுமார் 14 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையானது தற்போது சிதலமடைந்து கற்கள் பெயர்த்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இக்கிராமங்களிலிருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த சாலை வழியே செல்வதால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியே வேலைக்கு செல்லும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் சிரமத்திற்குளாகின்றனர். இச்சாலை வழியே செல்லும்
இருசக்கர வாகனங்கள் சாலையில் பெயர்ந்துள்ள கற்கலால் அவ்வப்போது பஞ்சராகி நின்று விடுகிறது. இந்த சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் பழுதாவதும் தினசரி கிராமத்தினர் கீழே விழுந்து காயமடைவதும் வாடிக்கையாகி விட்டது. இரவு நேர இருசக்கர வாகனப் பயணங்களால் உயிர்க்கே ஆபத்தான சூழல் ஏற்படுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இந்த வழித்தடத்தில் மினிபேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுவும் சாலை சரியில்லாததால் ஆங்காங்கே பழுதாகி நின்று விடுகிறது. இதனால் மினி பஸ் இந்த சாலை வழியே இயக்க தயக்கம் காட்டுகின்றனர். முதியவர்கள் மற்றும் கர்பிணிப் பெண்களுக்கு இந்த சாலை பயணம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இது குறித்து இக்கிராம மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்மந்தபட்ட
விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் இந்த சாலையினை சீரமைத்து தர இக்கிராம மக்கள் கோரிக்கை

No comments