Disqus Shortname

உத்திரமேரூரில் அதிமுக 4ஆண்டு சரித்திர சாதனைகள் விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் விழா

உத்திரமேரூர் அக்.24
காஞ்சி மேற்கு மாவட்ட அஇஅதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நேற்று தமிழக அரசின் 4 ஆண்டு கால சரித்திர சாதனைகள் விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சி மேற்கு மாவட்ட பாசறை செயலாளர் டி.சந்திரமெளலி தலைமை தாங்கினார். கே,தயளான் அனைவரையும் வரவேற்றார். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் அளித்து அதிமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுகொண்டார். உத்திரமேரூர் பஜார் வீதி, எண்டத்தூர் ரோடு, தண்டுக்காரத்தெரு, முத்துப்பிள்ளையார் கோவில் தெரு, கேதாரீஸ்வரர் கோவில் தெரு வழியாக 350 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வீடுதோறும் சென்று  தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் இவ்விழாவில் காஞ்சி சட்ட மன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணை தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய அவைத்தலைவர் எ.ராஜாமணி, மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பொ.சசிகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கே.சி.எம்.விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.