Disqus Shortname

பெருநகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் அக் 09
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா பெருநகர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி  நடந்தது.பேரணியில் மானாமதி வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் எம்.விஜயகுமார், துணைத் தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொ.சார்லஸ்சசிகுமார் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பேரணியில் பெருநகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல் மற்றும் கொசுக்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாரும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த துண்டுப்பிரசுரத்தில் கொசுகளால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிங்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது குறித்தும், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகள் குறித்தும் விளக்கி அச்சிடப்பட்டிருந்தது. பேரணியில்  மருத்துவ அலுவலர்கள் மைதிலி, கிருஷ்ணமணி, சரண்யா மருத்துவமணை ஊழியர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியானது பள்ளி வளாகத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

No comments