Disqus Shortname

உத்திரமேரூரில் காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டம்

உத்திரமேரூர் அக் 01
உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் கடந்த 13.09.2015
அன்று பொன்னியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின் போது இரு வேறு பிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 14 பேரை உத்திரமேரூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டனர். இச்சம்பவம்  தீரவிசாரிக்காமல் ஒரு தலை பட்சமாக வழக்கு பதிவு செய்துதாகவும், கைது செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்தும் உத்தரமேரூர் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் தி.வ.எழிலரசு தலைமை தாங்கினார், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் மல்லிமாறன் முன்னிலை வகித்தார். காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைசெழியன், மாநில துணை செயலாளர் சிபிசந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தின் போது மழை பெய்த போதிலும் தொடர்ந்து மழையில் நனைந்தபடி காவல்துறை எதிரான
கோஷங்கள் எழுப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் சிறுவர் ஏழ்ச்சி மன்ற மாவட்ட  துணை செயலாளர் வெ.கு.கவியரசன், ஒன்றிய துணை செயலாளர் வின்சென்ட் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

No comments