Disqus Shortname

கடல்மங்கலம் கிராமத்தில் மனு நீதிநாள் முகாம்

உத்திரமேரூர் அக்.20
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட  கடல்மங்கலம் கிராமத்தில்  மனு நீதிநாள் முகாம் செவ்வாய்க்கிழமையன்று முகாமில் மொத்தம் 384 பயனாளிகளுக்கு 25லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் ஹரிதாஸ் அனைவரையும் வரவேற்றார், காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார், முகாமில் விதவை உதவித்தொகை 15 நபர்களுக்கு 15 ஆயிரமும்,  இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 11 நபர்களுக்கு 11 ஆயிரமும்,  மாற்று திறனாளி உதவி தொகை 1 நபர்க்கு 1ஆயிரமும், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை 2 நபர்க்கு 2 ஆயிரமும், முதிர்கன்னி உதவித்தொகை 1 நபர்க்கு 1 ஆயிரமும், பழங்குடியினர் இனச்சான்று 3 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 200  நபர்களுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் கைத்தெளிப்பான், தென்னங்கன்று, ப்ளுரோட்டஸ் கிட் 5 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் புது வாழ்வு திட்டம் மூலம் 103 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 55 ஆயிரமும், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்க்கான தனி நபர் கடன் உதவி பெறும் பயனாளிகள் 33 நபர்களுக்கு 3லட்சத்து 30ஆயிரமும் சமூக நலத்துறை சார்பில் 2 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு 5 லட்சமும் ஆக மொத்தம் 384 பயனாளிகளுக்கு 25லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் தண்டரை தணிகைவேல், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  புலியூர்பழனி, காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், அரசு மருத்துவர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ்பாபு, சார்லஸ்சசிகுமார் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வரலட்சுமிகருணாநிதி, கார்வண்ணன், சசிகுமார், கே.சி.எம்.விஜய் உட்பட பலர் கலந்துகொண்டனர் கடல்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி நன்றி கூறினார்,

No comments