Disqus Shortname

வெங்கச்சேரி கிராமத்தில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர் 06/03/2020 
காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை யொட்டி உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. முன்னதாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு சைக்கிள், தையல் இயந்திரம், வேட்டி, சேலை, மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தங்கபஞ்சாட்சரம், பிரகாஷ்பாபு, தருமன், ரஞ்சித், இராமன் உட்பட கழக நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.