Disqus Shortname

உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரிக்கை

உத்திரமேரூர் 12/03/2020
உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிஉள்ளது. இப்பள்ளி 1966 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 54 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருமுக்கூடல், கரும்பாக்கம், பினாயூர், சாத்தனஞ்சேரி, சீதனஞ்சேரி, பழவேரி, அரும்புலியூர், மதூர், சிறுமயிலூர் உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 3௦௦ க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 1௦ ம் வகுப்பு முடிக்கும் மாணவ - மாணவிகள் மேல்நிலைக்கல்வி பெற 15 கி.மீ தொலைவில் உள்ள வாலாஜாபாத் வரை செல்ல வேண்டி உள்ளது. கிராமப்புறங்களிலிருந்துவாலாஜாபாத் வரை உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை. மேலும் திருமுக்கூடல் சுற்றி கல்குவாரிகள் செயல்பட்டு வருவதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாணவ மாணவியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக கிராமப்புற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மேல்நிலைக் கல்வி தடைபடுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இப்பள்ளியில் மேல்நிலைக்கல்விக்குத் தேவையான கட்டிட வசதி, இட வசதி என அனைத்து வசதிகளும் போதுமான அளவில் உள்ளதால் இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments