Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 19.80 லட்சம் கடன் உதவி

உத்திரமேரூர் 09/03/2020
உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் கிசான் அட்டை  வழங்கும் விழா நடந்தது நிகழ்ச்சியில் காவனூர்புதுச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தர்மன் தலைமை தாங்கினார். மாவட்ட சரக மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ரூ 19.80 லட்சம் கடன் உதவிகள் வழங்கினார். மேலும் நிகழ்வின் போது கிராம விவசாயிகளுக்கான கிஸான் அட்டைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெயவிஷ்ணு புருஷோத்தமன் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments