Disqus Shortname

உத்திரமேரூரில் சுகாதார தூதுவர்களான பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உத்திரமேரூர் 05/03/2020
உத்திரமேரூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் சார்பில் 10 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்கள் சுகாதார தூதுவர்களாக  நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் சுகாதாரத்தை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணி செயல்பட்டு வருகிறது. தூய்மை இந்திய திட்டத்தின் முக்கிய நோக்கமான வீடுகளில் கழிவறை அமைத்து தூய்மையாக பராமரித்தல், மட்கும் குப்பைகளை கொண்டு வீட்டில் உரம் தயாரித்தல், அவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை வீட்டு தோட்டத்தில் செடிகளுக்கு பயன்படுத்துதல் குறித்தும் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த சுகாதார தூதுவர்களுக்கு பிளாஸ்டிக்கின் தீங்கு குறித்து பெற்றோர்கள் மற்றும் சுற்றுப்புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் வீடுகள் மற்றும் பள்ளிகள் அருகே அவரவர்கள் கட்டுப்பாட்டில் சில மரக்கன்றுகளை நட்டு தினசரி பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. நீர் மேலாண்மை திட்டத்தின் முக்கிய செயல்களான மழை நீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம், தண்ணீர் மறு சுழற்சி, மரம் வளர்ப்பு பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவியர்கள், ஆசிரியர்கள் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments