Disqus Shortname

உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம்

உத்திரமேரூர் 09/03/2020
உத்திரமேரூரில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது கூட்டத்தில் உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார் நுகர்வோர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் உலக நுகர்வோர் தின விழா
உத்தரமேரூரில் நடத்துவது, உத்திரமேரூரில் புறவழிச்சாலை விரைவில் துவங்குவது, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை முறையாக செயல்படுத்துவது பருத்திகொள்ளை கிராமத்தில் சுடுகாட்டு பாதை அமைப்பது, உத்திரமேரூர் பேரூராட்சியில் பஸ் நிலையத்தில் இலவச கழிப்பிட வசதி அமைத்திடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.