Disqus Shortname

உத்திரமேரூர் கொரோனா பாதுகாப்பு பணிகளை காஞ்சி கலெக்டர் திடீர் ஆய்வு

உத்திரமேரூர் 25/03/2020
உத்திரமேரூரில் கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சி முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு
பிறப்பித்த்தையடுத்து உத்திரமேரூரில் காய்கறி, மருந்தகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக ஒருசில கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் பொன்னையா
உத்திரமேரூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உத்திரமேரூர் அரசுபொது மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பஜார் வீதி வழியாக நடந்து சென்று அங்கு திறக்கப்பட்டுள்ள காய்கறிக்கடைகள் மருந்தகங்களில் பார்வையிட்டு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி செல்ல பொது மக்களுக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் பணிகள் மற்றும் மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வின் போது வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், செயல் அலுவலர் லதா மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments