Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

உத்திரமேரூர் 05/03/2020
உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமங்களில் குப்பைகளை சேகரித்து அதில் மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிப்பு, மண்புழு தயாரிப்பு என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுகிறது. மக்கா குப்பையிலிருந்து மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டமானது மலையாங்குளம்
கிராமத்தில் முறையாக செயல்படுத்தப் படாததால் கிராமப்புற சாலையோரங்களில் கால்நடை கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் கழிகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உள்ளிட்ட பல்வேறு பூச்சுகள் உற்பத்தியாகி தெற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கிராமப்புற விவசாயத்திற்கு மிக முக்கிய தேவையான இயற்கை உரத்தினை இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கிடைத்திடவும் கிராமத்திற்கு வருவாய் ஈட்டவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான இத்திட்டத்தினை சம்மந்தபட்டதுறை அலுவலர்கள் முறையாக பராமரித்து நிர்வகிக்காததால் இத்திட்டம் செயல்பாடமல் உள்ளது. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக  செயல்படுத்தி இந்தக் குப்பைகைகளை அகற்றி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments