Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களுக்கு சுகாதாரத்துறையினர் விளக்கம்

உத்திரமேரூர் 09/03/2020
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு மருத்துவ  முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் கணேசன் குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சக்கரை நோய், ரத்த கொதிப்பு, இருதய நோய், சிறுநீரக நோய், எலும்பு, காது, தொண்டை, மூக்கு, பெண்கள் சிறப்பு பிரிவு, குழந்தைகள் சிறப்புப் பிரிவு, கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இசிஜி, எக்ரோ, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு நவீன இயந்திரங்கள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் முகாமில் பொது மக்கள் கொரோனா வைரசிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், தன்சுத்த்தின் முக்கியத்துவத்தையும் குறித்தும் மருத்துவர்கள் செய்முறையோடு பொது மக்களுக்கு விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் சாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 954 பேர் சிகிச்சை பெற்றனர். முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது கற்பிணிப் பெண்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments