Disqus Shortname

உத்திரமேரூரில் பாதுகாப்பற்ற முறையில் நெல் மூட்டைகள் விவசாயிகள் கவலை

உத்திரமேரூர் 10/03/2020
உத்திரமேரூர் ஒன்றியதுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களின்முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயம் மட்டுமே. கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி
காணப்பட்டன. இதனால் விவசாயிகள் பெரும்பாலானோர் பயிரிடத் தொடங்கினர். இதில் பெருமளவு விவசாயிகள் நெற்பயிரையே சாகுபடி செய்தனர். இவ்வாறு சாகுபடி செய்த நெல் மூட்டைகளை அரசு சார்பில் பெறப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் தாங்கள் பயிரிட்ட நெல் மூட்டைகளை வழங்க முற்பட்டனர். இந்த நெல் கொள்முதல் நிலையங்களானது உத்திரமேரூர் ஒன்றியத்தில் திருப்புலிவனம் மற்றும் இளநகர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் என்பதால் நெல் மூடைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இரண்டு கொள்முதல் நிலையங்களே உள்ள நிலையில் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாயிகள் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளுடன் பல மணி நேரம் காத்திருந்து தங்கள் நெல் மூட்டைகளை விற்கும் நிலை உள்ளது. பல்வேறு இன்னல்களைத் தாண்டி, கடன் பட்டு, பெருமளவு செலவு செய்து விளைவித்த நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சில கிராம விவசாயிகளுக்கு இந்த தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்மிக தொலைவில் உள்ளதால் அருகிலுள்ள தனியார் வியாபாரிகளிடம் நெல் மூட்டைகளை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே உத்திரமேரூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களை அரசு அமைத்திட வேண்டும். தற்போது தற்காலிக கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அரும்புலியூர், சாலவாக்கம், கருவேப்பம்பூண்டி மேனல்லூர், பென்னலூர் ஆகிய கிராமங்களில் அமைத்துத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments