Disqus Shortname

குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

உத்தரமேரூர் ஜீன், 23
உத்தரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தில் வடகாலணி, தென்காலணி விசூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அக்கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பாலாற்றில் இருந்து வரும்
குடிநீர் சரி வர வருவதில்லை மேலும் தண்ணீர்  ஆதாரமான கைப்பம்புகளும்,
மோட்டார் டோங்குகளும் பழுதடைந்து சரிவர இயங்காமல் உள்ளது.
இக்கிராமங்களில் குடிநீர் பஞ்சத்தை சிறிதளவு போக்கி வந்த கிணறுகளும்
வறட்சியின் காரணத்தினால்  வறண்டு விட்டன. இதனால் இக்கிராம மக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மானாம்பதி கிராமம்  சென்று குடிநீர்
கொண்டுவரும் அவல நிலை உள்ளதால். கொதிப்படைந்த வடகாலணி, கிராம மக்கள் சுமார் 250-ற்க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மானாம்பதி சாலையில் தண்ணீர் வேண்டி காலிக்குடங்களுடன் சாலை மறியலில்  ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த பெருநகர் காவல் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகமணி, கிராம மக்களிடம் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி ஒரிரு தினங்களில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில்  கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒன்றறை மணி நேரம் உத்தரமேரூர் வந்தவாசி சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments