Disqus Shortname

உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியத்தில் அ.இ.அதிமுகவின் தெருமுனை பிரச்சார கூட்டம்

உத்தரமேரூர் ஜீன்11
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கடல்மங்கலம், ஆலஞ்சேரி, குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களில் அ.இ.அ.தி.மு.கவின் தெருமுனை பிரச்சார கூட்டம் செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஆலஞ்சேரி ஆர்.கமலக்கண்ணன், முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு வரவேற்றார். திரைப்பட நடிகர் ராமராஜன், தலைமை கழக பேச்சாளர் இடிமுரசு ரவி ஆகியோர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சி மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 1லட்சத்து 46ஆயிரத்து 868 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் மூன்றாண்டுகளில் அதிமுக அரசின் சாதனைகளை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் எம்.என்.வரதராஜிலு, மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.