Disqus Shortname

அ.தி.மு.க அரசின் 3 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் ஜீன், 16
 உத்தரமேரூர் மேற்கு ஒன்றியம், பேரூராட்சி சார்பில் அ.இ.அ.தி.மு.க கழக அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் விளக்க மற்றும் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் நடந்தது. காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் பொ.சசிக்குமார், மாவட்ட இளைஞரணி பொருளாளர் கா.ஜெயவிஷ்ணு முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர்கள்  வி.அர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, தொகுதிசெயலாளர் கே.ஆர்.தருமன், சேர்மென் ஆர்.கமலக்கண்ணன் வரவேற்றார்கள். கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.மரகதம்குமரவேல், காஞ்சி எம்.எல்.ஏ.வி.சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்கள். துணைச்சேர்மென் அ.ரவிசங்கர், பேரூராட்சி துணைச்செயலாளர் இ.தயாளன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம்.கே.பி.வேலு, ஊராட்சி மன்றத்தலைவர் பி.பழனி, மானாம்பதி கண்டிகை லூசியாஜேம்ஸ், களியாம்பூண்டி தங்க, பஞ்சாட்சரம் திருவந்தவார் முருகன், வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜிலு உட்பட பலர் கலந்து கொண்டனர். 
நாஞ்சில் சம்பத் பேசியது
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து நின்று 37 தொகுதிகளில் வெற்றிப்பெற்றதைப்போல் இது வரை எந்த கட்சியும் வெற்றிப் பெற்றதில்லை. காங்கிரஸ் இந்திராகாந்தி தலைமையில் 1977­­­­­­ ல் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 12 இடமும் 1980 மற்றும் 1984 ல் 12 தொகுதிகள் பெற்றன ஆனால் 2014 ல் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட வெற்றிப் பெறாமல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கல்லைறைகட்டிவிட்டனர். விஜயகாந்த் கட்சி 11 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி 3 தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்தன. பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகளை அதிமுகவில் கூட்டணி வைத்து அந்த கட்சிகளுக்கு அங்கிகாரம் அளித்தவர் தமிழக முதல்வர் அம்மா தான்.
25 ஆண்டு காலம் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பா.சிதம்பரம் தற்போது நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் செந்த தொகுதியில் தன் மகனை டெப்பாசிட் கூட வாங்க வைக்க முடியவில்லை. தமிழகத்தில் மோடி அலை வீச வில்லை இரட்டை இலை தான் வீசுகிறது. 1962 தேர்தலில் காமராஜர் 187 சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி  பெற்று 32 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் இத்தேர்தலில் அதிமுக 217 தொகுதிகளில் வெற்றி  பெற்று 37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வரும் சட்ட மன்ற தேர்தலில் 234 இடங்களிலும் வெற்றி பெற்றது என்ற செய்தி நிச்சயம் வரும் என்றார். பேரூராட்சி இளைஞரணி இணைச்செயலாளர் எம்.துரைபாபு நன்றி கூறினார்.

No comments