Disqus Shortname

உத்திரமேரூரில் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படும் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

உத்தரமேரூர் ஜீன் 19

உத்தரமேரூர் பேரூராட்சி 18 வார்டிற்குட்பட்டது. இங்கு சுமார்
40,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் உத்தரமேரூர் அதை
சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதகாலமாக குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு
முறை வழங்கப்படுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காலிக்குடங்களுடன் பொது மக்கள் அலைந்து குடிநீர் எடுத்து வரும் அவலம்
நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் கேன் விற்பனை அமோகமாக உள்ளது.
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு தேவைப்படும் குடிநீர் உத்தரமேரூரில் இருந்து
சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செய்யாற்றில் ஆழ்துளை கிணறு
அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்பட்டு உத்தரமேரூர் மேல்நிலை நீர்தேக்கத்
தொட்டிக்கு தண்ணீர் நிரப்பி உத்தரமேரூர் பொது மக்களுக்கு வினியோகம்
செய்யப்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டப்போது
உத்தரமேரூர் பேருராட்சிக்கு தேவைப்படும் குடிநீர் நாளோன்றுக்கு சுமார் 18
லட்சம் லிட்டர் வந்து கொண்டிருந்தது ஆனால் தற்போது பூமியில் நீர் மட்டம்
வெகுவாக குறைந்த காரணத்தினால் 3.5 லட்சம் லிட்டர் மட்டுமே வருவதாக
கூறுகின்றனர். எனவே தண்ணீர் போதவில்லை உத்தரமேரூரை சுற்றி நரசிம்மன்நகர், அண்ணாநகர், பட்டஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறில் இருந்து உத்தரமேரூர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி வினியோகிக்கும் குடிநீர் மிகவும்
கலங்கலாகவும் குடிப்பதற்கு ஏதுவாக இல்லை என்றும் பிடித்து வைக்கும்
குடிநீர் குடங்களுக்கு அடியில் வண்டல் உள்ளதாகவும் பொது மக்கள் குற்றம்
சாட்டுகின்றனர். எனினும் குடிநீர் தேவைபாடு அதிகம் உள்ளதால் உத்தரமேரூர் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைக்க பொது பணித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் கூறுகிறது. எனவே விரைவில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம் நடத்த முடிவு

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அதிக தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருவதால் தங்களது குழந்தைகளை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதே போல் தினசரி வேலைக்கு செல்வோர்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திர மடைந்த  மக்கள் குடிதண்ணீர் பிரச்சினையை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினர்.

No comments