Disqus Shortname

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூர்ஜீன்,09
உத்தரமேரூர் அடுத்த புல்லம்பாக்கம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில். செய்யாற்று கரையோரம் அமைந்துள்ள இக்கோவிலானது பல்வேறு மன்னர்களால் வழிப்பட்டு வந்த பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆதிகேவச பெருமாளை வழிப்பட்டால் சகல காரியங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். இக்கோவில் கடந்த சிலவருடங்களாக சிதலமடைந்து இருந்தது. ஊர்பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலை புனரமைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று காலை மஹா
கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று  முன்தினம் முதல் விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், கோபுகதனபூஜை, பூர்ணாஹீதி வாஸ்துசாந்தி பிரவேசபலி, கலஸ்தாபனம், யாகசாலைபூஜை, ஹோமம்  போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.  வழங்கப்பட்டது. இவ்விழாவில் புல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பு.சு.ஜெயவேல் மற்றும் கிராமப்பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருற்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொருமாளை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்டரதத்தில் ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

No comments