Disqus Shortname

உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் பொதுமக்கள் கடும் அச்சம்

உத்தரமேரூர் ஜீன்,16
  உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பல்வேறு கனரக வாகனங்கள், பல கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பொருட்களை கொண்டு செல்கின்றன.
அவை அரசு நிர்ணயம் செய்த எடை அளவைவிட அதிக பாரம் ஏற்றி கொண்டு மிகவும் ஆபத்தான நிலையில் செல்கின்றன.
குறிப்பிட்ட வாகனங்களில் குறிப்பிட்ட அளவு எடை மட்டும் ஏற்றப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் கையூட்டு பெற்றுக்கொண்டு, இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிக பாரத்தை ஏற்றி கொண்டு ஆபத்தை அறியாமல் பயணம் செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது.
இதனால், எதிரே வரும் வாகன ஓட்டிகளும், சாலை அருகில் உள்ள வியாபாரிகளும், பொது மக்களும் பயத்துடனே நடந்து செல்கின்றனர். லாரி டிரைவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் இந்த ஆபத்தான பயணத்தால் விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
இது போன்ற வாகனங்கள் மீது அபராதம் விதித்து நிர்ணயிக்கப்பட்ட அளவு பாரத்தை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது

No comments