Disqus Shortname

மாம்பழம்விற்கும் கடைகளில் திடீர் ஆய்வு

உத்தரமேரூர் ஜீன்,06 

காஞ்சிபுரம் மாவட்டம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்  கே.கிருஷ்ணராஜ் உத்தரவின் போரில் உத்தரமேரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெ.ரெனிஷ் தலைமையில் சுகாதாரக்குழுவினர் உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை பழுக்கவைத்து விற்பனை செய்யபடுகிறதா என பழக்கடைகளிலும், மாந்தோப்பிலும் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சாப்பிடத் தகுதியற்ற நிலையில் இருந்த மாம்பழங்கள் ரூபாய் 3850 மதிப்பிலான 63 கிலோ மாம்பழங்கள் பரிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டனர். இந்த ஆய்வில் உத்தரமேரூர் ஒன்றிய வட்டார  சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.தாமரைச்செல்வம், உணவு  பாதுகாப்பு அலுவலர் எஸ்.விமலாவினாயகம், சுகாதார ஆய்வாளர்கள் காசிநாதன், வி.லோகநாதன், தமிழ்செல்வி மற்றும் உத்தரமேரூர் பேரூர்  பி.கிருஷ்ணமூர்த்தி துர்புறவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments