Disqus Shortname

இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கூட்டம்

உத்தரமேரூர் ஜீன், 09

காஞ்சி மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நேற்று திருப்புலிவனத்தில் நடந்தது. சங்க தலைவர்  சோழனூர்
அமைப்பாளர் சி.வெங்கடாசலம் துணை செயலாளர் பொ.சண்முகம், உத்தரமேரூர் சோழா அரிமா சங்க தலைவர் கோ.காளிதாஸ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் மா.நாகராஜ் வரவேற்றார். இக்கூட்டத்தில்
இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும்  உணவுப்பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள் மற்றும் காய்கறி வகைகளை விற்பனை செய்ய அரசாங்கமே விற்பனை மையங்கள் ஏற்படுத்தி உரிய  விலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்,
இயற்கை வேளாண்மைக்கு தேவையான விதைகள் அனைத்தும் அரசு மானிய விலையில் கிடைத்திட  எற்பாடு  செய்யவேண்டும் தமிழக அரசு இதை பரிசிலித்து நிரைவேற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கூட்டத்தில் தவனகிரி, மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மா.ஏழுமலை தலைமை தாங்கினார். பொருளாளர் கொடூர் என்.ரவீந்திரன்,

No comments