Disqus Shortname

குடிநீர் பிரச்சனை தீர்க்க கோரி உத்தரமேரூர் பேரூராட்சி முற்றுகை

உத்தரமேரூர், ஜூன் 10
உத்தரமேரூர் அடுத்த சோமநாதபுரம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர்
சரி வர வராததால் பேரூராட்சி அலுவலகத்தில் சோமநாதபுரம் கிராம பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
உத்தரமேரூர் அடுத்த சோமநாதபுரம் கிராமத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட
மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக
வரவில்லை. பொதுமக்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தெலைவில் சென்று
குடிநீர் எடுத்து வந்தும் ரூ30 மதிப்பிலாக கேன் தண்ணீரை பயன்படுத்தி
வந்தனர். மேலும் தண்ணீருக்காக பயன்படுத்திய வந்த சோமநாதபுரம் குளத்திலும்
ஆக்கிரமிப்பு அதிகரித்து தண்ணீரை அசுத்தம் செய்ததாலும் தண்ணீர் இன்றி
பொது மக்கள் பெரிதும் சிறமப்படுகின்றனர். குளத்திலுல்ல ஆக்கிரமிப்புக்களை
அகற்றி குளத்தின் நீரை சுத்தம் செய்து தரக் கோரியும் நேற்று முன்தினம்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் 200 க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் உத்தரமேரூர் பேரூராட்சியை முற்றுகையிட்டனர் சம்மந்தபட்ட
அதிகாரிகள் விரைவில் தண்ணீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்று உறுதியளித்ததின் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர் இதனால்
அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments