Disqus Shortname

மீனாட்சி மருத்துவ கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சி மையமும் புதுவாழ்வு திட்ட இணைப்பில் இலவச மருத்துவ முகாம்

உத்தரமேரூர் ஜீன்,27
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையமும் புதுவாழ்வு திட்ட இணைப்பில் இலவசமருத்துவ சிகிசிசை முகாம் வியாழக்கிழமையன்று நடந்தது,  திருப்புலிவனம் களப்பகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளில் இலவச மருத்துவ முகாம் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மாதம் 11-ம் தேதியில்  புலிவாய் ஊராட்சியில் 160 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளும் அளிக்கப்பட்டது. இவற்றில் 20, நபர்கள் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாடாதவூரிலும், 120 பேர் கலந்து கொண்டு 21 நபர்கள் மேல் சிகிச்சைக்காக மீனாட்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமையன்று 27-ல் திணையாம்பூண்டி ஊராட்சியில்  இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமில் சர்க்கரைவியாதி,  இரத்தகொதிப்பு, கண்சிகிச்சை ஐ.சி.ஜி. சிறுநீரக பரிசோதனைகள், நரம்பு சம்பந்தமான நோய், பல் பிரச்சனை, ஆகிய அனைத்து வித பரிசோதனைகளும் அளிக்கப்பட்டது. 110 நபர் கலந்து கொண்டு 25 பேர், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 20 க்கு மேற்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். முகாமை திணையம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.தனபால் தலைமை தாங்கி நடத்த மீனாட்சியம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் எம்.ராஜா  சமூக மேம்பாட்டு திட்ட  அலுவலர் வி.ராஜேந்திரன் முன்னிலையில் புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் பி.தனசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு உதவி திட்ட மேலாளர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனஞ்செழியன், சமூக மேம்பாட்டு திட்ட புல்லியியல் வல்லுநர் தீபக் ஊராட்சி துணைதலைவர் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொணடனர், முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்புலிவனம் பகுதி அணித்தலைவர் ஜெ.மணிகண்டன். தலைமையிலான அணியினர் சிறப்பாக செய்திருந்தனர். 

No comments