Disqus Shortname

உத்திரமேரூரில் பள்ளம் தோண்டி குடிநீர் பிடிக்கும் அவலம்

உத்திரமேரூர் ஜூன் 20:
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், இணைப்பு குழாய்களில், சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள், பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி, குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனம்பாக்கம், திருமுக்கூடல், பழவேரி, அரும்புலியூர், காட்டாங்குளம் மற்றும் சிறுதாமூர் போன்ற ஊராட்சிகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், செய்யாறு மற்றும் பாலாற்று பகுதிகளில், ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து, மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகள் மூலம், குடிநீர் வழங்கப்படுகிறது.
கோடைக்காலத்தை முன்னிட்டு, மேற்கண்ட ஊராட்சிகளில், தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, மேட்டுப் பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் குடிநீர் தொட்டிக்கு தொலைவில் உள்ள குடிநீர் இணைப்பு குழாய்களில், சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், பெரும்பாலான பகுதிகளில், பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பு பகுதியில், பள்ளம் தோண்டி, அதில், குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments