Disqus Shortname

"கால்நடை மருத்துவமனை தேவை':கட்டியாம்பந்தல் மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர் ஜூன் 14: 
கட்டியாம்பந்தல் பகுதியில் கால்நடை மருத்துவமனை இல்லாததால், சுற்றுப்புற கிராம மக்கள், சிகிச்சைக்காக, 15 கி.மீ., தூரம் அலைந்து வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கட்டியாம்பந்தல் ஊராட்சி. இதனை சுற்றி, சின்னமாங்குளம், பெருங்கோழி, தளவராம்பூண்டி, காரியமங்கலம், காட்டுக் கொள்ளை, பந்தயம்பட்டு, விளையபுத்தூர், சுக்குங்கொள்ளை, கொளத்தூர்,வெள்ளப்புத்தூர், சித்தாமூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மக்கள், கால்நடை வளர்ப்பில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், இப்பகுதிக்கு கால்நடை மருத்துவமனை இல்லாததால், மருத்துவ சிகிச்சை மற்றும் இதர தேவைகளுக்கு, 15 கி.மீ., தூரத்தில் உள்ள உத்திரமேரூர் சென்று வர வேண்டி உள்ளது.நீண்ட தூரம் அலைச்சல் மற்றும் போக்குவரத்து வசதி குறைவு காரணமாக, நோய் தாக்குதலில் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிவதில்லை.
இதனால், கால்நடைகளில் இறப்பும் அதிகரித்து வருகின்றது. எனவே, இப்பகுதியில் கால்நடை வளர்ப்போரின் நலன்கருதி, கட்டியாம்பந்தல் கிராமத்தில், கால்நடை மருத்துவமனை அமைக்க
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments