Disqus Shortname

மாநில அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

உத்தரமேரூர்Jun 08
 உத்தரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் மாநில அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்க மற்றும் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை( 08-06-2013)நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பொ.சசிகுமார் தலைமை வகித்தார்.
   ஒன்றியச் செயலாளர்கள் வி.ஆர். அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர் ஆகியோர் வரவேற்றனர்.
உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், பேச்சாளர் ஜெயகோவிந்தன், நடிகர் பொன்னம்பலம் ஆகியோர் தமிழக முதல்வரின் சாதனைகள் குறித்துப் பேசினர். 
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இ.தயாளன், தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கே.தயாளன்,
ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு, மானாம்பதி ஊராட்சி செயலாளர் எ.ராஜாமணி, லுôசியா ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.இளையராஜா, கே,சி.எம்.விஜய் ஆகியோர் நன்றி கூறினர்.

No comments