Disqus Shortname

மானாம்பதியில் 9 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 76 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கும் விழா.

உத்தரமேரூர் ஜீன்,03

      உத்தரமேரூர் தாலுக்கா மானாம்பதி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று 76 பயனாளிகளுக்கு ரூ.9லட்சத்து 69 ஆயிரம்  மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர்  சம்பத் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அ.ராஜாமணி அனைவரையும் வரவேற்று பேசினார். கால்நடை துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, மாவட்ட ஆட்சியர் எல்.சித்ரசேனன் உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் 76 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு தொகுதிசெயலாளர் கே.ஆர்.தருமன், குண்ணவாக்கம், ஆர்,கிருஷ்ணமூர்த்தி ஒழையூர் ஆர்.நாராயணசாமி, எம்.கே.பி.வேலு, தங்க.பஞ்சாட்சரம் உட்பட பலர் பங்கேற்றனர். கால்நடை உதவி இயக்குநர் ராஜன் சி.ஆண்டணி நன்றி கூறினார்.  

No comments