Disqus Shortname

குடிசை வீடு தீ பற்றியதில் 82 ஆயிரம் சேதம்.

உத்தரமேரூர் பிப்,15
 உத்தரமேரூர் தாலுக்கா அகரம்துாளி காலணியில்  வசிப்பவர் எல்லப்பன் மகன் சக்கரபாணி (50) இவருக்கு மனைவி முனியம்மாள் மற்றும் 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமையன்று மாலை 6.மணியளவில் காமாட்சி விளக்கு  ஏற்றி விட்டு தண்ணீர் பிடிக்க சென்றிருந்தினர் எதிர் பாராத விதமாக ஓலை குடிசை வீடு தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள மள  வென்று பரவியது. அகரம்துாளி ஊராட்சி‘ மன்ற தலைவர்  ப.பழனி உத்தரமேரூர் தீயணைப்பு நிலையத்திருக்கு தகவல் அளித்தார். உடனே தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் 82 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள்  தீயில் எரிந்து   நாசம் ஆயின. தகவல் அறிந்ததும் உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி 5 கிலோ அரிசி, 3லிட்டர் மண்ணெண்னை, வேட்டி, சேலை, வழங்கி நிவாரண உதவி தொகையை வழங்குவதாக கூறினார். உத்தரமேரூர் தே.மு.தி.க. ஒன்றிய கழக செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் மாவட்ட பிரதிநிதி வி.கார்த்திகேயன் பேரூர் கழக செயலாளர் ஜி-கே.வெங்கடேசன் ஒன்றிய இளைஞர் அணி துணைச்செயலாளர் கே.பாலமுருகன் அகரம்துாளி கிளை கழக செயலாளர் திருமலை செயற்குழு உறுப்பினர் ஜி.ரஜினி ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி 25 கிலோ அரிசி, வேட்டி, சேலை, காய்கறிகள் பால் பழம் போன்றவைகள் வழங்கி நிவாரண உதவி தொகையை வழங்குவதாக கூறினார். தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு உதவிகள் அளித்தனர். இது குறித்து உத்தரமேரூர்  போலீஸ். வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.   





No comments