Disqus Shortname

மகள் இறந்த வழக்கு மீது உரிய விசாரணை கோரி எஸ்.பி.,யிடம் மனு

உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த, ரம்யா கொலை வழக்கு தொடர்பான, குற்றவாளிகள் மீது வழக்கு தொடர வேண்டும் என, அவரது தாய் அஞ்சாலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
உத்திரமேரூர் அடுத்த வேடப்பாளையத்தைச் சேர்ந்த, என் மகள் ரம்யா (எ) ரமணியை, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வேல்முருகன் என்பவர், வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்.
கடந்த, 1ம் தேதி, என் மகள் அவருடன் வேலை செய்யும் பெண்ணை காயப்படுத்தி விட்டாகவும், இது தொடர்பாக, காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை சந்திக்குமாறு எங்களிடம் கூறினார்.
நாங்கள் காவல் நிலையத்திற்கு சென்றபோது, என் மகள் கொலை செய்யப்பட்டு, இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது, அவள் ஆறு மாதம் கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இருப்பினும், அவளது உடலை வாங்கி தகனம் செய்தோம்.
இந்நிலையில், என், மகளுக்கு 20 வயதும் என்றும், தனியாக குடித்தனம் நடத்தி வந்ததாகவும், 302 பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 16 வயது நிரம்பியுள்ள என் மகளை, வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய காவல் துறையைச் சேர்ந்த வேல்முருகன் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவள் பயன்படுத்திய செல்போன் இதுவரையில் கிடைக்கவில்லை. எனவே, என் மைனர் மகளை கற்பழித்து கொலை செய்த, வேல்முருகன் மற்றும் இதில், தொடர்புடையவர்கள் மீது, சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments