Disqus Shortname

கர்ப்பிணியை கொன்றது ஏன்? எஸ்ஐ மகன் வாக்குமூலம்

உத்தரமேரூர் ஜீன்,02
கர்ப்பிணி பெண் கொலை வழக்கில், உதவி சிறப்பு காவல் ஆய்வாளரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில், உதவி சிறப்பு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன், 50. இவர் கடந்த, 2011ம் ஆண்டு உத்திரமேரூரில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். கள்ள தொடர்பு
அப்போது உத்திரமேரூர் அடுத்த வேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த, வெங்கடாசலபதியின் மகள் ரம்யா, 20. என்பவருக்கும், வேல்முருகனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தனர். வேல்முருகன் மாறுதலாகி ஒரகடம் காவல் நிலையத்திற்கு சென்ற பின்பும், இவர்களது கள்ளத் தொடர்பு நீடித்தது.
கடந்த ஆண்டு, வேல்முருகன் காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் உள்ள, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ரம்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், ரம்யா கர்ப்பமடைந்தார். இத்தகவல் வேல்முருகனின் குடும்பத்திற்கு தெரிய வந்தது. 50 வயதில் தந்தை, கள்ளத் தொடர்பால் குழந்தையை பெற்று எடுத்தால், குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என நினைத்த, வேல்முருகனின் மகன் ரஞ்சித்குமார், 25, ரம்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.கொலை அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகல் ரம்யா வசித்து வந்த, வீட்டிற்கு ரஞ்சித்குமார் சென்றுள்ளார். "உன் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விட்டு, சொந்த ஊருக்கு போய்விடு' எனக் கூறி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரம்யா, வேல்முருகனுக்கு இத்தகவலை, அலைபேசி மூலம் தெரிவிக்க முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த, ரஞ்சித்குமார், தன் முதுகில் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரம்யாவை சரமாரியாக வெட்டினார். இதில், ரம்யா இறந்தார். ரஞ்சித்குமார் அங்கிருந்து தப்பிச்சென்றார். விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு, ரஞ்சித்குமாரை கைது செய்தனர். நேற்று காலை வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

No comments