Disqus Shortname

உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் திடீர் ஆய்வு

உத்தரமேரூர் ஜீன்,05



உத்தரமேரூரில் செவ்வாய்க்கிழமையன்று ரூ 56 லட்சத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலையை பொது மக்கள் பயன்பாட்டிற்க்காக உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் காஞ்சி மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் ரிப்பன் வெட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். அப்பொழுது அருகில் இருந்த உத்தரமேரூர் அரசு மருத்துமனையை ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் எக்ஸ்ரே பிரிவு ,பிரசவ வார்டு, குடும்பகட்டுபாடு பிரிவுகளில் பெண்களிடம் சுகாதார
ஆய்வாலர்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் தடுப்பு ஊசி, ரொட்டி பால்கள், வழங்குகிறார்களா என்று விசாரித்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் பிரிவில் இருப்பு பட்டியலை ஆய்வு செய்தார். தலைமை மருத்துவர் செந்தில்குமார் காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் கூறியது, உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு தனி கட்டிடம் இல்லை என்றும் கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டுமென்றும் கூறினார்ஆட்சியர். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசனிடம் புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென்றும் அரசு மருத்துவமனையில் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று கூறினார். எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ10லட்சத்தை ஒதுக்கி அரசு புற நோயாளிகளுக்கு கட்டிடம் கட்டி தருவதாக கூறினார்.

No comments