Disqus Shortname

உத்திரமேரூரில் 10 ம் வகுப்பு தேர்வில் 493 மதிப்பெண் பெற்று எஸ்.பி.காவியா முதலிடம்

உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம்வகுப்பு தேர்வில் எஸ்.பி.காவியா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம்

                           93 சதவீதம் தேர்ச்சி
உத்தரமேரூர் மே,31
உத்தரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் மாணவியர் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.பி.காவியா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும் எம்.யுவராணி 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் எஸ்.சண்முகப்பிரியா 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். மேலும் 6 மாணவியர்கள் கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண்களும், அறிவியலில் 2 மாணவியர்களும்,சமூகஅறிவியலில்1 மாணவியர் 100க்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் 400க்குமேல் 32 மாணவியர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் ம.கி.தியாகராஜன் தெரிவித்தார். 

உத்தரமேரூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் 63 சவீதம் தேர்ச்சி


உத்தரமேரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 63 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பி.லோகேஷ் 476 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் எஸ்.பிரியா 473 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் ஆர்.திவ்யபாரதி 470 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளதாக பள்ளித்தலைமை ஆசிரியர்  கோ.ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.  

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள்
மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி  100 சவீதம் தேர்ச்சி

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வி.சுகாசினி 488 மதிப்பெண்கள் பெற்று  முதலிடமும், ஆர்.பிரியங்கா 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஜி.யுவராஜ் 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், கணிதத்தில் 5 மாணவர்களும், அறிவியலில் 5 மாணவர்களும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், 28 மாணவர்கள் 400 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், பள்ளி முதல்வர் ஆர்.சேகர் தெரிவித்தார்.



No comments