Disqus Shortname

அ.தி.மு.க அரசு 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்.

உத்தரமேரூர் மே,25

 உத்தரமேரூர் மேற்கு ஒன்றியம் அழிசூர் கிராமத்தில் அ.தி.மு.க. அரசின் 2  ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டமும், 3ம் ஆண்டு துவக்க விழாவும் வெள்ளிக்கிழமையன்று நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் டி.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் சிறப்புரையாற்றினார். எம்.ஜீ.ஆர்.இளைஞரணி   மாவட்டச்செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா (எ) சத்யராஜ். வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் என்.எம்.வரதராஜலு, கே.ஆர்.தர்மன் தங்க. பஞ்சாட்சரம், உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.ஆதிமூலம் நன்றி கூறினார்.

No comments