Disqus Shortname

உழவர் பெருவிழா

உத்தரமேரூர் மே-9
உத்தரமேரூர் வேளாண்மை துறை சார்பில் அத்தியூர் மேல்தூளி, அகரம்தூளி கிராமத்தில் வியாழக்கிழமையன்று உழவர் பெருவிழா நடந்தது.  உத்தரமேரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது.  இவ்விழாவில் பராம்பரிய வேளாண்மை விளை பொருட்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன், அத்தியூர் மேல்தூளி மற்றும் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், உதவி பேராசிரியர், சித்தார்த் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அய்யாதுரை, வேளாண் விற்பனை அலுவலர் எஸ்.ராஜன், விதைச்சான்று அலுவலர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பாரம்பரிய வேளாண்விளை பொருட்களான இளநீர், பருத்தி, சீயக்காய், கேழ்வரகு போன்றவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதன்மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய் தடுப்பு தன்மை குறித்து கூறப்பட்டது.  சூரியசக்திமூலம் இயங்கும் மின்மோட்டார்கள்  வாங்குவதற்கு முன் வைப்பு தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வரைவு காசோலையை வேளாண் உதவி இயக்குனரிடம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர்  அசோகன் விவசாய கருவிகள் குறித்தும் அதை மான்ய விலையில் அரசு வழங்குவது குறித்து எடுத்து கூறினார்.  விழாவில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

No comments