Disqus Shortname

மிகப் பெரிய உத்திரமேரூர் ஏரி வறண்டது: விவசாயம் பாதிப்பு

உத்திரமேரூர்மே 07:
காஞ்சிபுரம்:மாவட்டத்தின் நெல் விளைச்சலுக்கு கை கொடுத்து வந்த உத்திரமேரூர் ஏரி வறண்டு போனது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளின் வரிசையில், உத்திரமேரூர் ஏரி முக்கியமானது. இது பல்லவ மன்னன் நந்திவர்மனால் உருவாக்கப்பட்டது. இதில் 13 மதகுகள் உள்ளன. ஏரி நிரம்பினால், மூன்று கலங்கள் வழியாக உபரிநீர் வெளியேற்ற வசதி உள்ளது.தடுப்பு அணைதிருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உருவாகும் செய்யாறு, காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் வழியாக சென்று திருமூக்கூடலில் கலக்கிறது. பெருநகர் பாலத்தில் இருந்து, 1 கி.மீ., தொலைவில், அனுமந்தண்டலம் எல்லையில், செய்யாற்றில் தடுப்பு அணை கட்டப்பட்டு உள்ளது.செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தடுப்பணையிலிருந்து தண்ணீர் உத்திரமேரூர் ஏரிக்கு திரும்ப விடப்படும். தண்ணீர் வரும் கால்வாய், 14 கி.மீ., தூரம் கொண்டது. உத்திரமேரூர் பொதுபணித் துறையினர் தடுப்பணை மற்றும் வரவுக்கால்வாயை பராமரித்து வருகின்றனர்.10 ஆண்டுகளாக...கடந்த 2002ம் ஆண்டு ஏரி முழுமையாக நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் ஏரி முழுமையாக நிரம்பவில்லை. ஏரியை நம்பி, உத்திரமேரூர், நீரடி, காட்டுப்பாக்கம், பட்டைஞ்சேரி, வாடாநல்லூர், ஏ.பி.சத்திரம், நல்லூர் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த, 5,462 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், விவசாயம் செழித்து, அறுவடை செய்யப்படும் நெல்லை, இருப்பு வைக்க இடமில்லாமல், விவசாயிகள் தவித்த காலமும் உண்டு.ஏரியை தூர் வார, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உலக வங்கி சார்பில் இரண்டு கட்டமாக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், பணிகள் அரைகுறையாக நடந்ததால், ஏரியில் எதிர்பார்த்த அளவில் நீர் சேகரமாகவில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.விவசாயம் பாதிப்புஇதுகுறித்து, நீராடி விவசாயி ஒருவர் கூறுகையில், ""கடந்த 2002ம் ஆண்டு, ஏரி முழுமையாக நிரம்பி, 5,462 ஏக்கர் நிலப்பரப்பில், மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஒவ்வொரு போகத்திற்கும், தலா 1.63 லட்சம் நெல் மூட்டைகள் மகசூல் கிடைத்தது. உத்திரமேரூர் ஏரி நிரம்பாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ""கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வரவுக்கால்வாய் மூலம் வந்த தண்ணீரைக் கொண்டு, முதல் மற்றும் இரண்டாவது மடையில் உள்ள விவசாயிகள், ஒரே ஒரு போகம் சாகுபடி செய்தனர். ""பால் முற்றும் நேரத்தில் இரண்டு தண்ணீர் பாய்ச்ச முடியாததால், பயிர் பதராகிப் போனது. சில விவசாயிகள், கிணறு வைத்திருப்பவர்களிடம் காசு கொடுத்த தண்ணீரை பாய்ச்சி பயிரை மீட்டனர். ""பத்து ஆண்டுகளாக உத்திரமேரூர் ஏரி முழுமையாக நிரம்பாததால், மூன்று போகம் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது,'' என்றனர்.

No comments