Disqus Shortname

திருப்புலிவனத்தில் குரு பெயர்ச்சி விழா

உத்தரமேரூர் மே,29
உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில்  செவ்வாய்கிழமையன்று இரவு குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. திருப்புலிவனத்தில் பழம்  பெரும் கோவிலான ஸ்ரீ அமிர்குஜாம்பாள் வியாக்ரபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு  ஸ்ரீ குருபகவானுக்கு தனி சன்னதி உண்டு குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் நடந்தது.  நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். ஊராட்சி மன்றத்தலைவர் பி.சரளாபிரகாஷ்பாபு அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய  கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு ஒன்றிய குழு உறுப்பினர் கார்வண்ணன் உட்பட பலர் பூஜையில் பங்கேற்றனனர்.

No comments