Disqus Shortname

உத்திரமேரூரில் உச்சகட்டத்தை தொட்ட வெப்பநிலை: 108 டிகிரிக்கு மேல் கொளுத்துகிறது

உத்திரமேரூர் மே-10:
உத்திரமேரூரில் வெயில் இன்று, 100 டிகிரி பாரன்ஹீட்டை, தாண்டியது.
உத்திரமேரூரில்  கடந்த 4ம் தேதி முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. உத்திரமேரூர் மற்றும்  சுற்றுவட்ட   பகுதிகளில் 105 முதல் 109 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
 மழை இல்லாததாலும், நீர் நிலைகள் வறண்டு விட்டதாலும் எங்கு பார்த்தாலும் பசுமை இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் இன்று வரை உத்திரமேரூரில் வெப்பநிலை உச்சநிலையிலேயே உள்ளது. அதாவது 100 டிகிரிக்கு மேல்தான் பதிவாகி இருக்கிறது. அதிக பட்சமாக 103 டிகிரி வரை பதிவானது.

காலை 7 மணிக்கெல்லாம் சுளீரென வெயில் நிலவுகிறது. காலையில் இருந்து பொதுமக்கள் மாலை வரை வெப்ப காற்றை அனுபவித்து வருகிறார்கள். இதனால் பலர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பொதுமக்கள் என்னதான் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டாலும் முடியவில்லை. மேலும் தண்ணீர் அதிகமாக குடித்தாலும் வெப்பத்தின் அதிகளவில் உள்ளது.

இதனால் உத்திரமேரூர்  நகரில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் தொடர்ந்து வெப்பநிலை ஏற்பட்டது. அந்த ஆண்டு அதிக பட்சமாக 108 டிகிரி வெப்ப நிலை பதிவானது.

இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வெப்ப நிலை உள்ளது. எனவே இந்த ஆண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் பலரும் கோடையை சமாளிக்க ஏற்காடுக்கு படையெடுத்துள்ளனர்.

No comments