Disqus Shortname

இளநகரில் அ.தி.மு.க அரசு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

உத்தரமேரூர் மே,25

உத்தரமேரூர் மேற்கு ஒன்றியம் இளநகர் கிராமத்தில் அ.தி.மு.க அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கம் மற்றும் 3 ஆண்டு துவக்கவிழாவும் வெள்ளிக்கிழமையனறு நடந்தது. ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் எ.ரவிச்சங்கர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் இ.பழனிவேல் தலைமை தாங்கினார்கள்.  ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், ஒன்றிய குழு தலைவர்  ஆர்.கமலக்கண்ணன் துணைச்செயலாளர் அ.ரவிசங்கர் வரவேற்றனர். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன். மற்றும் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் என்.எம்.வரதராஜன், பேரூராட்சி துணைத்தலைவர்  இ.தயாளன், ஓ.வி.வரதன்.தங்க.பஞ்சாட்சரம், எம்.ஜீ.ஆர்.இளைஞரணி மாவட்ட செயலாளர். எஸ்.எஸ்.ஆர்.சத்யா,(எ)சத்யராஜ், அ.பி.சத்திரம் ஜி.பெருமாள் புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். டிரைவர் இராஜா நன்றி கூறினார்.

No comments