Disqus Shortname

உத்தரமேரூர் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டிடப்பணி துவங்குவது எப்போது?

உத்தரமேரூர் ஜீலை,31
உத்தரமேரூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் அறிவித்த 14 கல்லூரிகளில் உத்தரமேரூர் கல்லூரி ஒன்றாகும். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு உத்தரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் கல்லூரி கட்ட முடிவு செய்து கட்டிடம் கட்ட இடம்
தேர்வு செய்யப்பட்டது. கட்டிடம் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளிக்கு செந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக கல்லூரி
செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம்
தேதி (மிகவும் தாமதமான) திறக்கப்பட்டது. இக்கல்லுாரியில் சென்ற ஆண்டு
காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்தரமேரூர், மேல்மருவத்தூர் சுற்றியுள்ள
கிராமங்களில் இருந்து மாணவ மாணவியர்கள் இங்கு இளநிலைதமிழ்,
இளநிலைஆங்கிலம், இளநிலைவணிகம், இளநிலை கணிதம், இளநிலை கணினிஅறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளில் 112 மாணவர்களும், 132 மாணவிகளும் மொத்தம் 244 பேர் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். தற்போது இரண்டாம் ஆண்டு துவக்கப்பட்டு சுமார் 240 மாணவ-மாணவியர்கள் சேர்ந்துள்ள நிலையில் தற்காலிகமாக இயங்கிவரும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான புதிய கட்டிடம் தற்போது பத்தாத நிலையில் கல்லூரி நிர்வாகம் பள்ளி நிர்வாகத்திடம் கூடுதல் கட்டிடம் வழங்கக்கோரியுள்ளது. இந்நிலையில் முதலாம் ஆண்டு கடந்த 7 ஆம் தேதி துவங்கப்பட்டது. கல்லூரியில் வகுப்பறை பற்றாக்குறையால் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 வரை நடைப்பெற்றது. அரசு நிர்ணயித்துள்ள 5 மணி நேரம் நடைப்பெற வேண்டிய கல்லூரி தற்போது காலை 9.00 மணி முதல் 12.00 வரை முதலாமாண்டு மாணவ மாணவியர்க்கும், 12.00 மணி முதல்
3.30 வரை இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்க்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதாவது 3 மணி நேரமே நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் பாடங்களை முழுமையாக கற்றுகொள்ளாத நிலை உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் மாணவ மாணவியர்களின் கல்வி கேள்விக்குறியாகிவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் பணியியனை விரைந்து துவங்கி முடித்து தர பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments