Disqus Shortname

மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக்கல்லூரியில் 93-96-ம் ஆண்டு பயின்ற மாணவ-மாணவியர் சந்திப்பு கூட்டம்

உத்தரமேரூர்,ஆக,25
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக்கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று 1993-96-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர்  என்.கவிராஜன் தலைமை தாங்கினார். மாணவர் ராமமூர்த்தி வரவேற்றார். சமுதாய மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 93—96-ம் ஆண்டு இக்கல்லூரியில் பயின்ற  முன்னாள் மாணவ-மாணவியர் 157பேர் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று தற்போது என்ன வேலை செய்கிறார்கள். தரம் உயர்ந்துள்ளதை பற்றியும் கூறினார்கள். முன்னாள் ஆசிரியர்கள் நாராயணசாமி, சோமசுந்தரம், திலகவதி, தமிழ்செல்வன் உட்பட பலர் பாராட்டி பேசினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை வசந்தகுமார், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர் முடிவில் ஆனந்தி நன்றி கூறினார்.

No comments